JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திண்டுக்கல் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்லில் அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு திண்டுக்கல் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சாய் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்ஆர்.அஸ்வின், பொருளாளர்பி.லோகேஷ், பொறியாளர் லஷ்மன்தேவ் சிங், ஆர்டெக் கிரஷர் உரிமையாளர் ஹரி பிரசாத்,பட்டய தலைவர் செண்பகமூர்த்தி,பட்டய செயலாளர் சி.எஸ்.சி.பாண்டியன், பட்டய பொருளாளர் பிரபாகரன், பட்டய உறுப்பினர்கள் வாசுதேவன், பால சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *