JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

அனந்தநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)கோகுல் சிறப்புப்பார்வையாளர்களாக கலந்து கொண்டார்.

குத்தாலம் அருகே அனந்தநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)கோகுல் சிறப்புப்பார்வையாளர்களாக கலந்து கொண்டார்.குத்தாலம், அக்.03:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், அனந்தநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டமானது ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி புவனேஸ்வரி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி )கோகுல் சிறப்புப்பார்வையாளர்களாக கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.இக்கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் செல்வம் 48 தீர்மானங்களை வாசித்தார். தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முக்கியமான தீர்மானங்களான அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக்கடை கட்டிடம் சமுதாயக்கூடம் கட்டிடம்,தான் சாலைகளை பராமரித்தல் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களும்,கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் திட்டங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் ஊராட்சி செயலரை தொடர்பு கொண்டு அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கூடுதல் கலெக்டர் வளர்ச்சி கோகுல் தெரிவித்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி நன்றி தெரிவித்தார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.படவிளக்கம்:-
குத்தாலம் அருகே அனந்தநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கூடுதல் கலெக்டர் வளர்ச்சி கோகுல் சிறப்புப்பார்வையாளர்களாக கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *