JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிளைத் தலைவர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தனசிங், மற்றும் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள துணை எல்ஐசி அலுவலகத்தின் முன்பாக எல் ஐ சி முகவர்களின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇந்த ஆர்ப்பாட்டத்தின் போது எல்ஐசி முகவர்களின் குறைக்கப்பட்ட முதலாண்டு கமிஷனை மீண்டும் வழங்கிடவும், சூப்பர் சேல்ஸ் சாத்தி செயலி அணுகுதலினை எளிமையாக்கிடவும், பிரீமியம் பாய்ண்டுகளில் ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் வழங்கிடவும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்திடவும், பீமா தகம் எக்ஸ்சேஞ்ச் மற்றும் போர்டபிலிட்டி திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கவும், முகவர்களின் குழு காப்பீட்டுக்கான வயது வரம்பை நீக்கி முகவர்கள் பணியில் உள்ளவரை காப்பீடு வழங்கிடவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள துணை எல்ஐசி அலுவலகம் முன்பாக முகவர்கள் கோஷம் எழுப்பி 50க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *