ஜங்ஷன் குட் ஷெட் லாரி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம்
தனிநபர் அராஜப்போக்கு மற்றும் கத்தியை காட்டி மிரட்டி எங்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை
கத்தியை காட்டி நேர்த்திய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் மதியம் போராட்டம்
லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் ஜங்ஷன் கூட்செட் பகுதியில் பணியாற்றி வருகின்றனர் அந்தப் பகுதியில் 46 லாரி உரிமையாளர்களும் 120 ஓட்டுநர்களும் மற்றும் 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களும் சேலம் ஜங்ஷன் கூட் செட்டில் வரும் ரேஷன் பொருட்கள் மற்றும் தனியார் கூட்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து பிழைத்துக் கொண்டு வருகின்றனர்
அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்
இந்த நிலையில் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜான் பீட்டர் என்பவர் எங்களுடன் இணைந்து பணி செய்து வந்தார்
தற்போது அவரது வாகனங்களை உரிய ஆவணங்கள் இன்றி இயக்க வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்தினார் தற்போது ஜங்ஷன் கூட்செட் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது
உரிய ஆவணங்கள் வாகனத்திற்கு இருந்தால் மட்டுமே இயக்க முடியும் என அறிவுறுத்தி உள்ளது அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களும் நாங்கள் இயக்க வருகிறோம் ஆனால் ஜான் பீட்டர் என்பவர் அவரது வாகனத்திற்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல்
வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் வாகனம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் அந்த வாகனத்தை இங்கு இயக்க முடியாது என சங்கத்தின தெரிவித்தனர் ஆனால்

சங்கத்தினர் மீது எஸ்சிஎஸ் டி ஆக்ட் ஜாதிய வன்கொடுமை வழக்கு கொடுப்பேன் என மிரட்டி வருகிறார்
சங்கத்தில் மிரட்டி ஒன்னரை கோடி பணம் தந்தால் மட்டுமே உங்களை பணி செய்ய விடுவேன்
உங்கள் அனைவரையும் வேலையை செய்ய விடமாட்டேன் என மிரட்டி வருவதாகவும் லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் காவல்துறையிடம் ஜங்ஷன் மற்றும் மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடமும் ஆர்டிஓ அவர்களிடமும் புகாரை வழங்கி உள்ளனர்
இதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் இல்லை
இதன் காரணமாக இன்று கூட்செட் பகுதிக்கு வந்து ஜான் பீட்டர் பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் தொந்தரவு செய்து தனது லாரியை ஒரு பகுதியாக நிறுத்தி பணி செய்யவிடாமல் தடுத்த
தெரிகிறது
இதனை அடுத்து 46 லாரி உரிமையாளர்களும் 120 வாகன ஓட்டுனர்களும் மற்றும் 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களும் ஒன்றாக இணைந்து
சேலம் இரும்பாலை பிரதான சாலையான புது ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த நபர் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை எங்களது போராட்டத்தை விடமாட்டோம் என நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்
இதனால் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது
இதனை அடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆனாலும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் ஜான் பீட்டர் மீது கைது நடவடிக்கை செய்யப்பட வேண்டும் எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Leave a Reply