
நாகர்கோவில், அக். 01,கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சி, ஆதிச்சன்புதூர் பகுதியில் தோவாளை கால்வாயில் மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு கால்வாயில் மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்ட காலாவதியான மருத்துவக் கழிவுகளையும், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளையும் மர்ம நபர்கள் வீசி சென்றதாக கூறப்படுகிறது.இந்த கால்வாய் தண்ணீரை அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் கால்வாய் நீரை அருந்தி வருகின்றன. இதனால் மருத்துவக் கழிவுகள் மூலம் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.எனவே, கால்வாயில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்ற நபர்களை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply