JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

போச்சம்பள்ளி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில்புரட்டாசி சனிக்கிழமையன்று கோயில் வழிபாட்டின் போது தேனீக்கள் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் ஊராட்சியில், மலை மீது புகழ்பெற்ற ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதலே 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். மதியம் சுமார் 1 மணி அளவில், பக்தர்கள் திரளாக மலைப்பாதையில் ஏறிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மரத்தில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, தேனீக்கள் பக்தர்களை நோக்கிப் பறந்து வந்து கொட்டத் தொடங்கின.எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இதில் பலருக்குத் தீவிர தேனீக்கள் கடி ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே சிலர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குறித்துத் தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். மலையின் மேல் பகுதியில் சிக்கித் தவித்த பக்தர்களைப் பாதுகாப்பாக மீட்புக் குழுவினர் கீழே இறக்கினர். மேலும் சில பக்தர்கள் காயமடைந்த பக்தர்களை மீட்க உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும், உறவினர்களின் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் நெடுங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புரட்டாசி சனிக்கிழமையன்று கோயில் வழிபாட்டின் போது நடந்த இந்தத் தேனீக்கள் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *