
ராமநாதபுரம் மாவட்டம் அக்டோபர் 4, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி (கி.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திதா கலந்து கொண்டார். இதில் உதவி திட்ட அலுவலர் வேதா, மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால், பட்டணங்காத்தான் கூட்டுறவு வங்கி விஜி, விஏஓ தர்மராஜ், யூனியன் சங்கத் தலைவர் சுந்தரம், தாட்கோ ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் கிராம ஊராட்சியில் வீடு தூர குடிநீர், ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு,தூய்மை பாரத திட்டம்,திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதியை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சக்கரக்கோட்டை ஊராட்சியில் மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுதல் அற்ற பகுதியாக அறிவித்து 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply