JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டு ரயில் சேவையில் மாற்றம்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டு ரயில்களின் சேவையில் மாற்றம்.
அக்டோபர் மாதம் 11,13,15,20,22,25,27,29 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.அதேபோல் அக்டோபர் மாதம் 12,14,16,21,23,26,28,30 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 08:00 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி , திருச்சிராப்பள்ளி கரூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *