JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சென்னையில் திடீர் பள்ளம்: கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னையில் திடீர் பள்ளம்: கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஓஎம்ஆர் சாலை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் டைடல் பார்க் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.இந்த விபத்தில் காருக்குள் இருந்த ஒருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மெட்ரோ பணியாளர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் ராட்சத கிரேன் மூலம் காரை மீட்டனர்.காரில் பயணித்த நபர் முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து இறங்கியதால் காயம் இன்றி உயிர் தப்பினார்.இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த பள்ளம் ஏற்பட்ட நிலையில் சாலை மூடப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *