JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் அதிவேக வாகனங்கள் ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்காணிப்பு; போலீசார் நடவடிக்கை.

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் அதிவேக வாகனங்கள் ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்காணிப்பு; போலீசார் நடவடிக்கைமானாமதுரை அக் 9
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் விதிமீறும் வாகனங்களுக்கு, ‘ஸ்பீடு ரேடார் கன்’ மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறையை டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார்.மதுரை பரமக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகன இயக்கம், சாலை குறுக்கிடும் பததிகளிலும் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. , வாகன ஓட்டிகளின் விதிமீறல் காரணமாக கோர விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில், காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பில், முக்கிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில், வாகன விதிமீறலை கண்காணித்து, தானியியங்கியாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எஸ்.பி., அபிஷேக் உத்தரவின் பேரில், மானாமதுரை போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்பீடு ரேடார் கன்’ கண்காணிப்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது. மானாமதுரை போக்குவரத்து போலீசார், நேற்று அதனை சோதனை அடிப்படையில் பரிசோதித்து, அபராதம் விதிக்கும் பணியை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் மகிமை தாஸ் ,காளீஸ்வரி ஆகிய போலீசார், மானாமதுரை நான்கு வழிச்சாலை பகுதியில் , ‘ஸ்பீடு ரேடார் கன்’ சாதன கண்காணிப்பை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில், அதிகபட்சமாக 80 கி.மீ., வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனை கடந்து அதிவேகமாக வரும் வாகனங்களை இந்த சாதனம் மூலம் கண்காணித்து, விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனத்தின் வேகம், விதிமீறல் அளவை ஸ்கேன் செய்து, அந்த வாகனத்தின் பதிவெண்ணுக்கு (உரிமையாளருக்கு) தானியியங்கியாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் விதத்தில், அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த, இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *