
ராகுல் காந்திக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்ப்புதிமுகவை மக்கள் தோற்கடித்தும் ஆணவம் குறையவில்லை என்பது வருத்தம் மாணிக் தாகூர் பேட்டிகாங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் ராகுல் காந்தி இன்று பகல் 12.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.இதையடுத்து ராகுல் காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.மேலும் ராகுல் காந்தியைக் காண்பதற்காக இளைஞர்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ராகுல் காந்தி விமான நிலையத்துக்கு வந்தடைந்ததும், அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு ஓய்வெடுத்த பின்னர், மாலையில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும் இரவு சென்னை விமான நிலையத்துக்கு வரும் ராகுல் காந்தி இரவு 9.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.முன்னதாக அவரை வரவேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 8000 ஓட்டு அவர்கள் குறைவாக வாங்கி இருக்கிறார்கள். இன்னும் வெற்றியில் தோல்வி, தோல்வியில் வெற்றி என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். மக்கள் எவ்வளவு தண்டித்தாலும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் இருக்கிறதை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது.இரண்டாம் இடத்திற்கு வந்ததை திமுக கொண்டாடுகிறார்கள். மூன்றாவது இடத்திற்கு வருவோம் என்று எதிர்பார்த்தார்கள் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டார்கள். மேலும் அமித்ஷா மற்றும் பழனிச்சாமி அவர்கள் அண்ணா திமுகவை மூன்றாம் இடத்திற்கு எவ்வளவு வேகமாக இழுத்து வர முடியுமோ அவ்வளவு வேகமாக இழுத்து வந்து விட்டார்கள் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் இல்லை என்று சொல்கிறார்கள். அப்போ அவர்களிடம் இருக்கின்ற தே.மு.தி.க மனிதநேய மக்கள் கட்சி உட்பட இருக்கின்ற கட்சிகள் என்ன.திமுகவை மக்கள் தோற்கடித்தும் அதை உணராமல், வாக்கு வங்கி சரிந்து உள்ளது அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று உணராமல் இப்படி ஆணவத்தோடு நடந்து கொண்டிருப்பது வருத்தம் தான்.ராகுல் காந்திக்கும் முதல்வர் விஜய்க்கும் இருப்பது சகோதரத்திற்கான உறவு. முதல் விஜய் டெல்லி சென்ற பொழுது சோனியா காந்தி ராகுல் காந்தியை சந்தித்தார் கடந்த முறையே ராகுல் காந்தி முதல் விஜய் சந்தித்திருக்க வேண்டும் நேரத்தின் காரணமாக அது முடியவில்லை இன்று கண்டிப்பாக சந்திக்கிறார்.

Leave a Reply