JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் – 11.10.2026கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் கரூர், கரூர் புறகர், குளித்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தாந்தோன்றிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிங்கப் பெண்கள் படை, சைபர் கிரைம், அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் என பலரும் தங்களது நடைமுறைகள் என்ன, என்ன என்பதை கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வாகன சோதனையில் ஈடுபடும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்ட காவலர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மைதானத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு ஏன் பந்தல் போடாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள் என கடிந்து கொண்டதுடன், காவல் அதிகாரிகள், காவலர்களை நிழலில் நிற்க வைத்து அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *