JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மடிப்பாக்கத்தில் பெண் உள்பட 3 பேர் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது..

*மடிப்பாக்கத்தில் பெண் உள்பட 3 பேர் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது..மடிப்பாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த உதயராணி, தனது கணவர் மற்றும் உறவினர் சதீஷ்குமார் ஆகியோருடன் நேற்று காரில் மசூதி தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இரு இளைஞர்கள் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் சமாதானம் செய்து அனுப்பிய நிலையில், அந்த இளைஞர்கள் விடாமல் காரை பின்தொடர்ந்து உதயராணியின் வீட்டிற்கே சென்றுள்ளனர்.அங்கு வைத்து உதயராணியின் கணவர் மற்றும் உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், ‘நான் மூன்று கொலைகள் செய்தவன்’ என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். பெண் என்றும் பாராமல் உதயராணியையும் தாக்கி, ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து மடிப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உதயராணி அளித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்தான சிசிடிவி காட்சிசசள் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *