
மயிலாடுதுறை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக தில்லி போலீஸாரைக் கண்டித்து மயிலாடுதுறையில் இடதுசாரி இயக்கத்தினர் சாலை மறியல் போராட்டம்:-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தில்லியில் சிஜேபி கட்சிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம் பொதுச்செயலாளர் பேபி, மாநில செயலாளர் பெ.சண்முகம், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இன்று கைது செய்யப்பட்டனர். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு இடதுசாரி இயக்கங்களின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. சிபிஐ-எம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ-எம்எல் மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் சி பி ஐ-எம் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பேரணியாக வந்து நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் தில்லி போலீஸாரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து மாற்று திசையில் திருப்பி விடப்பட்டது.

Leave a Reply