மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை தேடிய தீயணைப்புத் துறையினர் மாணவனின் உடலை சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பாலையூர் போலீசார் விசாரணை:-மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அனந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ஆதவன்(17) திருவிடைமருதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மாலை தந்தையுடன் வயலுக்கு சென்றுவிட்டு வீரசோழன் ஆற்றில் ஆதவன் நண்பர்கள், அவரது தந்தை சங்கர் ஆகியோர் குளித்துள்ளனர். அப்போது ஆற்று சூழலில் சிக்கி ஆதவன் இழுத்துசெல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அவரது தந்தை சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் இறங்கி தேட முயற்சியித்துள்ளனர். மேலும் குத்தாலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீரசோழன் ஆற்றில் தேடி சடலமாக ஆதவனை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆடுதுறை-தரங்கம்பாடி வரையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வீரசோழன் ஆற்றில் விதிமுறைகளை மீறி ஆழமாக மண் எடுக்கப்பட்டதால் மண் எடுத்த பள்ளத்தில் சிக்கி ஆதவன் இறந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply