JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

நவராத்திரியை முன்னிட்டு, மேலையூர் கருவாழக்கரை ஸ்ரீ மகா சதாசிவ பீடத்தில், 16 கைகளுடன் கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்தில், சிறப்பு சண்டி ஹோமம் மற்றும் , நாட்டியாஞ்சலி கலை விழா தொடங்கியது.

மயிலாடுதுறை 12.10.2026நவராத்திரியை முன்னிட்டு, மேலையூர் கருவாழக்கரை ஸ்ரீ மகா சதாசிவ பீடத்தில், 16 கைகளுடன் கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்தில், சிறப்பு சண்டி ஹோமம் மற்றும் , நாட்டியாஞ்சலி கலை விழா தொடங்கியது, மாநிலம் முழுவதும் இருந்து நடனக் கலைஞர்கள் பங்கேற்பு:-மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலையூர் கருவாழக்கரையில், ஸ்ரீ மகா சதாசிவ பீடம் அமைந்துள்ளது. ஆலயத்தில் 16 கைகளுடன் கூடிய, அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்கா தேவி சன்னதி அமைந்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்கள் நடைபெறும் சதசண்டி யாகம் நேற்று துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து, நவராத்திரி கலை விழா நாட்டியாஞ்சலி துவக்கியது. இதில் மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த, பரதநாட்டிய குழுவினர் பல்வேறு நாட்டிய நாடகங்களை நடத்திக் காட்டினர். டாக்டர் செல்வம், டாக்டர் வீரபாண்டியன் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸ்ரீ மகா சதாசிவ பீடாபதி சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், சண்டி ஹோமம் மற்றும் நவசக்தி அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *