JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

40வது தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் -2026

40வது தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2026 தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, நத்தம் NPR குழும நிறுவனங்களின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) சார்பில், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் (DDAA) ஏற்பாட்டில் நடைபெறும் இச்சாம்பியன்ஷிப், அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நத்தம் NPR குழும நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட இளம் தடகள வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். 14 வயதுக்குட்பட்டோர், 16வயதுக்குட்பட்டோர், 18வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.நிகழ்வில் NPR குழும நிறுவனங்களின் இயக்குநர் (IGR) பேராசிரியர் ஆர். ஆனந்த் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளருமான திரு. எம். சிவகுமார் போட்டி குறித்த விரிவான நிகழ்வு அறிக்கையை வழங்கினார்.NPR கல்லூரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். செல்வபெருமாள் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *