JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கிராமங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் தீவிரக் கள ஆய்வு!.

கிராம வேளாண் அனுபவத் திட்டம் (RAWE): 4-ஆம் நாள் களப்பணி அறிக்கை
திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள அகறவேல்குடி, உள்ளிக்கோட்டை, ராமாபுரம் மற்றும் சவளக்காரன் கிராமங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் தீவிரக் கள ஆய்வு!வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் தங்களது “கிராம வேளாண் அனுபவத் திட்டத்தின்” (RAWE) 4-ஆம் நாள் களப்பணியாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அகறவேல்குடி, உள்ளிக்கோட்டை, ராமாபுரம் மற்றும் சவளக்காரன் ஆகிய கிராமங்களுக்குச் சென்று தீவிரக் கள ஆய்வில் ஈடுபட்டனர்.இன்று காலை அக்கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களை (VAO) நேரில் சந்தித்த மாணவிகள், அக்கிராமங்களின் மக்கள் தொகை, எழுத்தறிவு பெற்றோர் மற்றும் பெறாதோர் விகிதம், சாகுபடிக்கு உகந்த நிலப்பரப்பு (Cultivable Land) மற்றும் சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களின் பரப்பளவு (Non-cultivable Land) குறித்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களைச் சேகரித்தனர்.அதனைத் தொடர்ந்து, அக்கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகள் (Small Farmers), குறு விவசாயிகள் (Marginal Farmers) மற்றும் பெண் விவசாயிகளின் (Women Farmers) விளைநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *