JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்.

நாகர்கோவில், அக். 01,தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு மற்றும் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *