JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கணேஷ் அரிசி ஆலையில். ரேஷன் அரிசியை முறைகேடாகபாலிஷ் செய்து வெளிமாநிலங்களுக்கு டன் கணக்கில் கடத்தப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் கணேஷ் அரிசி ஆலையில். ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி வந்து பாலிஷ் செய்து வெளிமாநிலங்களுக்கு டன் கணக்கில் கடத்தப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் புரோக்கர்கள் வாயிலாக ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அரிசி ஆலைகளில் பாலிசி செய்யப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது பின்னர் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது இந்த விவகாரத்தில் அரிசி ஆலையின் உரிமையாளர் சக்திவேல் என்பவர் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனினும் குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை என்கிறார்கள் அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசி உண்மையில் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா கேள்விக்குறி அரிசி எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது அதற்கான ஆவணங்கள் மற்றும் விற்பனை பதிவுகள் முறையாக அரிசி வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான அனுமதி மற்றும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து கொடுமைப் பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலை வெளி கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அரிசி ஆலை சக்திவேல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *