JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டம்

கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் முதல் நாளை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடங்கினர். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற விவசாயிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களால் மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி முறைகள் வேளாண் நடைமுறைகள் மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளால் எதிர்கொள்ளப்படும் பல்வேறு வேளாண் பிரச்சனைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு அவற்றுக்கான தொழில்நுட்ப ரீதியாக தீர்வுகள் மற்றும் பொருத்தமான வேலை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *