
காட்டுமன்னார்கோவில், அக். 13 தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கண்டனம்:வழக்கறிஞர்களுக்குத் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்!காட்டு மன்னார்கோவில் பேருந்து நிலையம் எதிரில், வழக்கறிஞர்கள் நலச் சங்கம் சார்பில், வழக்கறிஞர் மீதான கொலை முயற்சி சம்பவத்தைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் நலச் சங்கச் செயலாளர் நிரோஷா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கப் பொருளாளர் நாகவேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.அதில்
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் சட்டம்–ஒழுங்கு நிலை மிகவும் கவலைக்கிடமான சூழலுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும், வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர்கள், காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞர் மீது கூலிப்படையை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையும் கண்டித்தனர்.வழக்கறிஞர் மீதான கொலை முயற்சி வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத மீதமுள்ள குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும், வழக்கறிஞர்களின் உயிருக்கும், பணிப் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், வழக்கறிஞர்களுக்குத் தனிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் நலச் சங்கப் பொருளாளர் சாதுசலாம் மற்றும் வழக்கறிஞர்கள் தர்மராஜன், ராமு, அருணா, பிரபா, ராஜேஸ்வரன், விக்கி,வசந்த ராஜ், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில் வழக்கறிஞர் அபிலாஷ் நன்றி கூறினார். படம்; பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்;

Leave a Reply