JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

​யுபிஐ (UPI) பரிவர்த்தனை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வணிகர்கள் பேரணி:-

மயிலாடுதுறை 12.10.26​யுபிஐ (UPI) பரிவர்த்தனை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வணிகர்கள் பேரணி:-டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தை (MDR) மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்து வணிகர்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் வணிகர் பேரமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலாளர் தலைமையில் பேரணியில் பங்கேற்ற வணிகர்கள் யு பி ஐ பரிவர்த்தனைக்கு கட்டண வரி விதிப்பை திரும்ப பெற கோரி மயிலாடுதுறை மணிகூண்டு பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் தெரிவித்ததாவது:​”வங்கி இடையேயான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு (UPI) மத்திய அரசு தற்போது கட்டணம் / சேவைக் கட்டணம் போன்ற முறையை அறிவித்துள்ளது. இது வணிகர்களுக்கு மிகுந்த சிரமத்தையும் கூடுதல் நிதிச்சுமையையும் ஏற்படுத்தும்.​மத்திய நிதியமைச்சர் அவர்கள் இது வணிகர்களுக்கானது மட்டுமே, பொதுமக்களைப் பாதிக்காது என்று தெரிவித்திருந்தாலும், வணிகர்களும் பொதுமக்களும் வேறு வேறு அல்ல. வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மறைமுகக் கட்டணங்கள் மற்றும் வரிகள் யாவும் இறுதியில் பொதுமக்கள் மீதே சுமையாக மாறி விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். பொதுமக்கள் வணிகர்களிடம் செலுத்தும் பணத்தைக் கொண்டுதான் வணிகர்களும் வரிகளைச் செலுத்துகின்றனர்.​எனவே, வணிகர்களையும் பொதுமக்களையும் பாதிக்கும் இந்த யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை (Merchant Discount Rate – MDR) மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்து உதவ வேண்டும். வணிகர்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் வணிகர் பேரமைப்பு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடத்துகிறோம்.​மேலும், வணிகர் பேரமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட நேரம் கேட்டுள்ளனர்; விரைவில் நேரில் சந்தித்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *