JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் வலுப்பெறும் தமிழக வெற்றிக் கழகம்

மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தொடர்ந்து இணைந்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள அவரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மேற்கு சட்டமன்ற உறுப்பினராக லட்சுமணன் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார்

மேலும் அவரை சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழக வெற்றிக் கழக தலைமை நியமித்து உள்ளது

இதனை அடுத்து வேகம் எடுத்த எம் எல் ஏ சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் திமுக அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் நிர்வாகிகள் அந்த அந்த கட்சிகளில் இருந்து இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்

தற்போது மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிக அளவிலான உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார்

வலுப்பெறும் தமிழக வெற்றிக் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *