JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

அரியலூர் மாவட்டம் வழக்குகளின் சமரச விழிப்புணர்வு.

செந்துறை மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்ற வளாகத்தில் வழக்குகளின் சமரச விழிப்புணர்வு குறித்து நீதி அரசர் வரதராஜன் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் வழக்கு தாரர்களுக்கும் சமரசம் என்றால் என்ன? மற்றும் அதன் நோக்கம் என்ன? குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். மேலும் நீதிபதி கூறியதாவது:நீதிமன்றங்களை நாடிவரும் வழக்கு தாரர்கள் தாங்கள் பிரச்சனைகளை சமரசம் செய்து தாங்களுக்குள் தீர்வு காண சமரச மையத்தில் சமரச பேச்சுவார்த்தை அவர்கள் விருப்பம் சார்ந்தது எது ஒன்றும் அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது.சமரசம் விரைவானது,திறமைந்தது, சிக்கனமானது, சமரசம் சாதாரணமான இயல்பான சுமுகமான முறைமைகளின் கெடுபிடி இல்லாத சூழலில் நடைபெறும் சமரசத்தில் ரகசியம் காக்கப்படும் மனிதர்களுக்கு உறவுகள் நீடிக்க மீள்துளிர்க்க மேம்பட உதவுகிறது.இரு தரப்பில் இருக்கும் நன்மை நிகழ்கிறது. ஒரே முயற்சியில் பல வழக்குகள் பிரச்சனைகள் முடிவு காணப்படுகிறது, நீதிமன்ற கட்டணமும் முழுமையாக திரும்ப அளிக்கப்படுகிறது, இது போன்ற குறிப்புகள் இடம் பெற்று துண்டு பிரசுரங்கள் அங்கே வருகை தந்த பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *