
30-9-2026 அன்று திட்டக்குடியில் மாவட்ட குழு என்.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ராமநத்தம் செயலாளர் கே.எஸ்.இப்ராஹீம்,கைகாட்டி செயலாளர் எம்.எஸ்.மணி, ராமநத்தம் வடக்கு தலைவர் எம்.அருள்,ஆவினங்குடி செயலாளர் எ.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவையில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.குணசேகரன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் ஆர்.சுப்பிரமணியன்,வி.தொ.ச மாவட்ட செயலாளர் வி.பி.முருகையன், சிபிஐ மங்களூர் ஒன்றிய செயலாளர் எம்.நிதிஉலகநாதன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட கௌரவ தலைவராக ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவராக கே.எஸ்.இப்ராஹீம், மாவட்ட செயலாளராக என்.ஞானசேகரன், மாவட்ட பொருளாளராக பி.ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…ஒன்றிய அரசு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும். தமிழக அரசெ.மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யவும்,தமிழக அரசு மகளிர்க்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பதால் ஆந்திராவைப் போல் தமிழகத்தி லும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்.சி எடுக்க ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்றும்ஏஐடியுசி மாநில மாநாட்டிற்கு இரண்டு வாகனத்தில் 50 நபர்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply