JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

குறிஞ்சிப்பாடி மற்றும் உட்புற ஏரியாக்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவும்.

குறிஞ்சிப்பாடி வட்டம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் உட்புற ஏரியாக்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவும்,


குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள ஆடூர் அகரம், கண்ணாடி, பெரிய கண்ணாடி, மஞ்சபேட்டை, விருப்பாச்சி, பூதம்பாடி, கஞ்ஜநாதன் பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் மற்றும் பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவும், அரசால் கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடுகளுக்கு ரூ 10 லட்சம் வழங்க வலியுறுத்தியும் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாச்சியரிடம் 98 மனுக்கள் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தோழர். மகேஷ்பிரபு தலைமையில் கடலூர் மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் S. குணசேகரன் கலந்து கொண்டு மனுக்களை தாசில்தார் அவர்களிடம் வழங்கினார் ஏராளமான பொதுமக்களும் பெண்களும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *