
தூய்மையே சேவை 2026 நாகர்கோவில், அக். 01,கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை முதல் நிலை பேரூராட்சியில், மத்திய அரசின் “தூய்மையே சேவை 2026 – Swachhata Hi Seva” இயக்கத்தின் கீழ் பல்வேறு தூய்மை மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
“ஒருங்கிணைந்த முயற்சி, பயனுள்ள மாற்றம்” என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், பொதுமக்களிடையே சுற்றுப்புறத் தூய்மை, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், சுகாதாரத்தைப் பேணுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.பேரூராட்சி பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதுடன், தூய்மை பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply