JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

பூம்புகார்.மேலையூரில் என் எஸ் எஸ் முகாமில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்வு .

சீர்காழி மேலையூர் செப்டம்பர். 29.,மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூரில் தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கியுள்ள நாட்டு நலப்பணித்திட்ட முகாம் இப்பள்ளியின் சார்பில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வின் ஒரு சமூக சேவையாக காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான பள்ளிக்கு அருகே அமைந்துள்ள காவிரி கரை ஓரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களோடு பூம்புகார் பனை அறக்கட்டளை இணைந்து பனை விதை நடவு நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைவர் இரா. ராஜசேகரன், மற்றும் பள்ளியின் செயலர் இரா.ராமசொக்கலிங்கம் தலைமை வகிக்க, பள்ளியின் நிர்வாக அலுவலர் ஏ.நடனம், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பரணிதரன் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக சீர்காழி.ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முனைவர் கே.ரவீந்திரன், நிறுவனர் பூம்புகார் பனை அறக்கட்டளை ஆகியோர் கலந்துக்கொண்டு பனை விதைகளை நட்டு, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பனை மரத்தின் பயன்களைக் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு எவ்விதத்தில் பாதுகாப்பு அளிக்கின்றது என்பதை குறித்தும் பேருரை ஆற்றினர்.நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எஸ். பிரபாகரன், முகாமின் உதவி திட்ட அலுவலர்கள் ப.முத்துக்குமாரசாமி, க. ராஜமோகன்,முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் அ. ரவி , முன்னாள் அலுவலக உதவியாளர் குமரவேல், செம்பனார் கோயில் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணதாசன்,பி.விநாயகம், பூம்புகார் பனை அறக்கட்டளை பொறுப்பாளர் சிவபுண்ணியம், மற்றும் தன்னார்வ தொண்டு செய்த பள்ளியின் நாட்டு நல ப்பணித்திட்ட மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் முனைவர் ஜி. சிதம்பரம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *