JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மன்னார்குடி அருகே ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடி., செப்.01:திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் லாரி ஓட்டுநர் மோகன்ராஜ் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மன்னார்குடி அருகே இடையர்நத்தத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இண்டேன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை வாயில் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ஜெ.கோபு தலைமை வகித்தார்.சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, ஓட்டுநர் மோகன்ராஜ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பணியின்போது ஓட்டுநர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.மேலும், ஓட்டுநர்களின் பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதில் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கலைவாணன், ஒன்றியத் தலைவர் எஸ்.பூமிநாதன், மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் பி.உத்ராபதி, ஒன்றியப் பொருளாளர் வி.பவித்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *