JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

போக்குவரத்து சீரமைத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு பகுதிகளில் ஜெயங்கொண்டம் மற்றும் விருத்தாச்சலம் செல்லும் பேருந்துகள் சென்டர் மீடியன் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வந்தனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருந்து பேருந்து சென்ற பின் செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது
இது குறித்து ஆண்டிமடம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆண்டிமடம் நான்கு ரோடு பகுதியில் பஸ் நிறுத்தத்தில் போலிசார் மாற்றம் செய்தனர் இதனையடுத்து ஆண்டிமடம் நான்கு ரோடு பகுதிகளில் ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், காடுவெட்டி, தென்னூர் செல்லும் பேருந்துகளால் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் பொதுமக்களை உரிய பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறிச் செல்லுமாறு வலியுறுத்தினர்.மேலும் ஜெயங்கொண்டம் செல்லும் பொதுமக்கள் ஆண்டிமடம் நான்கு ரோடு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறவும் பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். விருத்தாச்சலம், காடுவெட்டி,தென்னூர் செல்லும் பேருந்துகள் பயணிகளை நான்கு ரோட்டிற்கு முன்பாகவே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுமாறும் தென்னூரிலிருந்து வரும் பேருந்துகள் நான்கு ரோட்டிலேயே திரும்பாமல் பேருந்து நிலையம் சென்று திரும்பி விருத்தாச்சலம் செல்லும் வகையில் போலீசார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் ஆண்டிமடம் நான்கு ரோடு பகுதிகளில் தற்போது போக்குவரத்து இடையூறின்றி பாதசாரிகள், இருசக்கரம், நான்கு சக்கர வாகன தடையின்றி செல்லும் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை எடுத்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *