
சீர்காழி, அக்டோபர் 01, மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசலில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஆறாம் நாள் நிகழ்வாக பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி திருமுல்லைவாசல் தாழம் தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் வரை சென்றது .அதில் மாணவர்கள் விழிப்புணர்வு கை பதாகைகள் ஏந்தியும் , போதை எதிர்ப்பு வாசகங்களை கோஷமிட்டும் சென்றார்கள். இதனால் கிராம புற மாணவர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்நிகழ்வு ,பள்ளி தலைமை ஆசிரியர் ச.சுரேஷ் தலைமையிலும் ,சீர்காழி ச.மு .இந்து மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் எஸ் முரளிதரன் முன்னிலையில், பேரணியினை திருமுல்லைவாசல் தொழிலதிபர் ஜெ.கரிகாலன் மற்றும் க.சிந்தாமணி கரிகாலன் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். பேரணியில் துணைத் திட்ட அலுவலர்கள் U.ஜெயராமன் K.அறிவழகன் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான தி. இராசேந்திரன் நன்றி கூறினார்.

Leave a Reply