JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

நாகர்கோவில் மாநகராட்சி நிலுவை சொத்துவரி ரூ.13.40 கோடி15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், அக் – 02: நிலுவை சொத்துவரி ரூ.13.40 கோடி15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி, இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைநாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் நிலுவையில் உள்ள சொத்துவரி ரூ.13.40 கோடி செலுத்தப்படாமல் இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்துமாறு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998-ன் கீழ் கடமை அறிவிப்பு வழங்கியும் இதுவரை நிலுவைத்தொகையை செலுத்தாத கட்டட உரிமையாளர்களுக்கு தற்போது படிவம்–4 அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சொத்துவரி நிலுவை வைத்துள்ள கட்டட உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. படிவம்–4 அறிவிப்பு வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களுக்கு அடுத்தகட்டமாக படிவம்–5 மற்றும் படிவம்–6 ஆகியவற்றின் கீழ் ஜப்தி உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.மேலும், 2026–2027-ம் நிதியாண்டிற்கான சொத்துவரியை வருகிற 31.10.2026-க்குள் முழுமையாக செலுத்தும் வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.5,000 வரை இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடைவாடகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்தி, இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *