
விருதுநகர் மாவட்டம் மத்திய அரசு சரவெடி தயாரிக்க அனுமதி அளித்து இருப்பதால் பட்டாசு உற்பத்தியாளர்களின் பரிந்துரையை ஏற்று சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதனை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக
வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மத்திய, மாநில, அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் நன்றி தெரிவித்து வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.மேலும் சரவெடி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் நீக்கியதால் இந்த தீபாவளி மிகவும் சந்தோஷமான தீபாவளி எனவும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரவெடி வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி சிறப்பாக இருக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தனர்.

Leave a Reply