JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கணவாய்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சக்கிலியன்கொடை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிக ழ்ச்சியில் கணவாய்பட்டி ஊராட்சி செயலர் கே.வெற்றிவேந்தன் தீர்மானங்களை வாசித்தார். இந்நிகழ்வில் பற்றாளர் பணி மேற்பார்வையாளர்ம. சித்ராதேவி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், வேளாண்மைதுறை அலுவலர் அழகர், ஆய்வாளர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், ரேஷன் கடை ஊழியர், அங்கன்வாடி ஊழியர் , கால்நடை துறை அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீர்மானங்களான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க ப்பட்டது. கிராம ஊராட்சியின் சுகாதார தணிக்கை அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. பொது சுகாதாரம் குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதில் ஊர் முக்கியஸ்தர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாயத்துறை,கூட்டுறவுத்துறை, ஊராட்சி பணியா ளர்கள், பொதுமக் கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *