JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

போச்சம்பள்ளி பேரு அள்ளி கிராமத்தில் குடிநீர் பிரச்சனையால் காரசார விவாதம் — போச்சம்பள்ளி கிராம சபை கூட்டம்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி ஊராட்சிக்கு உட்பட்ட பேருஅள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, காலை 11 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த இக்கூட்டம், ஒரு மணி நேரம் காலதாமதமாக நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. இதனால் கூட்டத்தில் பங்கேற்க வந்த கிராம மக்களும், திரளான பெண்களும் நீண்ட நேரமாக அலைச்சலுக்கு உள்ளாகி காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.கூட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், பேருஅள்ளி கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடமும் ஊராட்சி நிர்வாகத்திடமும் கேள்விகளை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் கடும் காரசாரமான விவாதங்கள் எழுந்தன.தங்கள் பகுதிக்கு தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். காந்தி ஜெயந்தி நாளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *