
திருத்துறைப்பூண்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 02-10-2026 வெள்ளிக்கிழமை காலை 10-30 மணி அளவில் திருத்துறைப்பூண்டி பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டதுநிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமானஎழிலரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பழனியப்பன், துரைராஜ், சங்கரவடிவேலு முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், ஸ்டீபன் செல்வகுமார், நகர பொறுப்பாளர் ஞானசுந்தரம்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சிவா சண்முகவடி வேலு, வட்டாரத் தலைவர் தியாகராஜன், விவசாயப் பிரிவு தலைவர் ராஜு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஜர், மாவட்ட சேவை பிரிவு தலைவர் அன்பழகன், மண்டல தலைவர்கள் தண்டபாணி, ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply