திருவாரூர்., அக்.03-

இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம்.“இடமில்லை… ஏற முடியவில்லை… குழந்தைகள் கண்ணீரில்..!”விடுமுறை கூட்டத்திலும் கூடுதல் பெட்டிகள் இல்லை – ஓடும் ரயிலில் ஏறிய மூதாட்டி; ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் ஆவேசம்…விடுமுறை நாட்கள் என்றாலே ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். ஆனால், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களோ, கூடுதல் பெட்டிகளோ ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி கின்றனர்.வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் ஊர் திரும்புவதற்காக நாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தனர்.அவர்கள் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதால், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி காரைக்கால்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் ரயில் ஏற்கனவே நிரம்பி வழிந்தது. பொதுப்பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடமில்லாத நிலையில், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் தவித்தனர்.இதையடுத்து சிலரை முன்பதிவு பெட்டிகளில் நின்று பயணிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முன்பதிவு பயணிகளுக்கும், பொதுப்பெட்டி பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திருவாரூரில் பொதுப்பெட்டி பயணிகள் கீழே இறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொதுப்பெட்டியில் ஏற முடியாத சூழல் ஏற்பட்டது.ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வேகமாக ஓடி வந்த மூதாட்டி ஒருவர் ஓடும் ரயிலில் பத்தான முறையில் ஏறினார்.மறுபுறம், குடும்பத்தில் பாதி பேர் ரயிலில் ஏறிவிட்ட நிலையில், கைக்குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் இருந்த பெண்கள் சிலர் ரயிலில் ஏற முடியாமல் ரயில் நிலையத்தில் தவித்தனர்.குழந்தைகள் கண்ணீருடன் கதறி அழுத காட்சி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், “கூட்டம் அதிகமாக இருக்கும்போது டிக்கெட் வழங்குவதை ஏன் கட்டுப்படுத்தக்கூடாது? விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முடியாதா? கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாதா?” என ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.பல மணி நேரம் காத்திருந்த பயணிகள், மாலை 7.30 மணியளவில் வந்த அடுத்த ரயிலில் பயணம் செய்தனர்.விடுமுறை காலங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் சேவையை அதிகரித்து, இதுபோன்ற நெரிசல் மற்றும் பாதுகாப்பற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply