JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்.

விருதுநகர் மாவட்டம்மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, கல்லூரி துணை முதல்வரும் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார் .தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் .பாலாஜி மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர்.ப்ரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் காகித விளக்கக்காட்சி, வினாடி வினா, நிரல் பிழை கண்டறிதல், இணையதள வடிவமைப்பு, மின்னணு சுவரொட்டி மற்றும் குறும்படம் ஆகிய ஆறு போட்டிகள் நடைபெற்றன.காகித விளக்கக்காட்சியில் மாணவர்கள் தங்களது அறிவையும் கருத்துத் திறனையும் வெளிப்படுத்தினர். வினாடி வினா மற்றும் நிரல் பிழை கண்டறிதல் போட்டிகள் மூலம் அவர்களின் தொழில்நுட்ப அறிவும் சிக்கல் தீர்க்கும் திறனும் வெளிப்பட்டன. இணையதள வடிவமைப்பு மற்றும் மின்னணு சுவரொட்டி போட்டிகளில் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். குறும்படப் போட்டியில் கதை சொல்லும் திறன், குழு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறனை மாணவர்கள் ளிப்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் ஐந்து கல்லூரிகளைச் சார்ந்த 8 துறைகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒட்டு மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் விருதுநகர், விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவர்கள் சுழற்கோப்பையை வென்றனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு கேடயம் மற்றும் பங்கேற்று சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.உதவி பேராசிரியர் குருமகேஷ்வரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *