
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சுப்பிரமணியன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.வீட்டின் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக, செப்டிக் டேங்கிற்கு கான்கிரீட் போட்டு, அதற்கான பலகைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது செப்டிக் டேங்கிற்குள் இறங்கிய மூன்று தொழிலாளர்கள், மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மூன்று பேரையும் ஆபத்தான நிலையில் மீட்டனர்.
பின்னர், அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, செப்டிக் டேங்கிற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று பேரும் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒரே நேரத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்கள்
ராமசந்திரன் ஆசாரிபாஸ்கர் கொத்தனர்தினகரன் கொத்தனார்

Leave a Reply