JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

கரூரில் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.
இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, “போதையை தவிர்ப்போம்; வாழ்க்கையை காப்போம்”, “போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது கரூர் நகரின் முக்கிய பகுதிகளான பழைய அரசு மருத்துவமனை, கரூர் நகராட்சி அலுவலகம், ஜவஹர் பஜார், பழைய பேருந்து நிலையம், திண்ணப்பா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது.போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்த மாணவர்கள், குறிப்பாக இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வி, விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.பேரணியின் மூலம் போதைப்பொருள் இல்லாத கரூரை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *