JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திண்டுக்கல்லில் லயன். டாக்டர் எஸ். சகாய செல்வராஜ் அவர்களுக்கு சிறந்த பன்முக நாயகர் விருதை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வழங்கினார்.

திண்டுக்கல்லில் லயன். டாக்டர் எஸ். சகாய செல்வராஜ் அவர்களுக்கு சிறந்த பன்முக நாயகர் விருதை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வழங்கினார்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நகரவாசி மாத இதழ் சார்பாக சிறந்தோர் விருது – 2026 நிகழ்ச்சி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் மகஜோதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயல் ,இசை, நாடகம், விளையாட்டு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை சிறப்பாக பணியாற்றியதற்காக லயன். டாக்டர் எஸ். சகாய செல்வராஜ் அவர்களுக்கு பன்முக நாயகர் விருதினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மாநில தலைவரும், நகரவாசி மாத இதழின் ஆசிரியருமான முனைவர் ஆ.செபா மாஸ்டர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர்
வ.அன்பரசு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளர் லயன். டாக்டர் பி. செல்லபாண்டியன், மாநில பொருளாளர் டி.வி.பி. கணேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *