
தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டிஸ்ரீவீ கல்லூரியின் ஸ்ரீ பைரவர் மஹாலில் என்சிசி முகாம் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியின் ஸ்ரீ பைரவர் மஹாலில் என்.சி.சி. முகாம் தேசிய மாணவர் படையின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லெப்டினென்ட் கர்னல் நவநீத் கணேஷ் அவர்கள்ஸ்ரீவீ கல்லூரியின் இயக்குனர்கள் சாந்தி, பிரியா ஆகியோரிடம் ஸ்ரீவீ கல்லூரிக்கு நினைவு பரிசை வழங்கினார். மேலும் லெப்டினன்ட் கர்னல் மற்றும் சுபேதார் மேஜர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் 8 பட்டாலியன் கர்னல் சேது மாதவன் மற்றும் திண்டுக்கல் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் வீரமணி OIC ECHS ஆகியோர் கலந்து கொண்டு என்சிசி மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனையையும், கருத்துக்களையும் வழங்கினார்கள்.இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, திருச்சி, காரைக்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த என்சிசி மாணவர்கள் 550 பேர் பங்கேற்றனர்.
குரூப் கமாண்டருடன் மற்ற பட்டாலியன் சார்ந்த கர்னல் சரவணன், லெப்டினன்ட் கர்னல் சசிதர், மேஜர் மினி, மேஜர் மங்கையர்க்கரசி, லெப்டினென்ட் கர்னல் திலீப், ஆடம் ஆபிசர் அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.14 பட்டாலியன் சார்ந்த அனைத்து ராணுவ வீரர்கள் மற்றும் ANO- கள் நாகலிங்கம், எஸ். விஸ்வநாதன், பி. துரைப்பாண்டி கே. மாரிமுத்து அரவிந்த், பிரவீன், திலகர் மற்றும் தீபா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவீ கல்லூரியின் சேர்மன் எஸ்.எஸ்.சுதந்திரம் அவர்களின் சீரிய அறிவுறுத்தலின்படி இக்கல்லூரியின் செயலாளர் கே.பிரபாகரன் வழிகாட்டுதலின்படி , என்.சி.சி. பயிற்சியாளர் துரைப்பாண்டி,
நிர்வாக மேலாளர் மணிகண்டபாபு, பொறியாளர் பிரவீன் ஆகியோர் என்சிசி பயிற்சி முகாம்
நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Leave a Reply