JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் தமுமுக, மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் தமுமுக, மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் தமுமுக, மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக மாநில செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மு.யா.முஸ்தாக்தீன் தலைமையில் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மமக மாநில அமைப்பு செயலாளர் பழனி.பாரூக் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவராக ஷேக் பரித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமுமுக மாவட்ட செயலாளராக யாசர் அராபத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மமக மாவட்ட செயலாளராக முகமது ரிஜால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமுமுக மாவட்ட பொருளாளராக நத்தம் அகது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழு கூட்டத்தின் போது தீர்மானங்களான:
திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் அனுதினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அதனை சரி செய்யும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல்துறையிடம் ஆலோசனைகள் செய்து சில பாதைகளை ஒரு வழி பாதைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என பொதுக்குழுவின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறோம் .பொதுமக்களை அச்சப்பட வைக்கும்
தனியார் பேருந்துகளில் ஒலி அதிகமாக உள்ள ஏர் காரனை பயன்படுத்தி வரும் தனியார் பேருந்துகளைதிண்டுக்கல் RTO அவர்கள்உடனடியாக பிடித்து ஏர் காரனை கழட்டி அவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு இந்த பொதுக்குழுவின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் .முக்கியமான சாலை பகுதிகளில் ஆடு, மாடுகள் திரிந்து வருகிறது. இந்த மாடுகளால் அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்ட வண்ணமாக உள்ளது. ஆகவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு மாட்டின் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் இது போன்ற செயல்களில் மாடுகளை ரோட்டில் திரிய விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *