JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கிருஷ்ணகிரி மாவட்டம், கீழ்குப்பம் கிராமத்தில் குடிநீரில் நுரை கலந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கீழ்குப்பம் கிராமத்தில் குடிநீரில் நுரை கலந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். குடிநீர் விநியோக ஏற்பட்டிருந்த கோளாறுகளை சரி செய்தனர் இதை.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் மூலம் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுத்தமான குடிநீர் மீண்டும் வழங்கப்பட்டது.
இதனால் நீண்ட நேரமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், விரைந்து நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கீழ்குப்பம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *