
அரியலூர் ~ இந்திய ராணுவத்தில் வீரர் வீட்டில் திருட்டுஆள் இல்லாத வீட்டில் புகுந்து 3 பவுன் நகை, ரூ.1.37 லட்சம் திருட்டுஅரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (47).இவர் இந்திய ராணுவத்தில் அவில்தாராக காஷ்மீரில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகன் ஆயுஸ் (14) ஆகியோர் கொல்லாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ரம்யாவும் மகனும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.காஷ்மீரில் இருந்து சென்னை வந்திருந்த சுப்பிரமணியனும் அவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.நிகழ்ச்சியை முடித்துவிட்டு மூவரும் வீடு திரும்பியுள்ளனர்அப்போது வீட்டின் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி, 1 பவுன் செயின், தலா கால் பவுன் எடையுள்ள 4 மோதிரங்கள் மற்றும் ரூ.1,37,000 ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply