JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்:

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்: செந்துறை செப்டிக் டேங்க் சென்ட்ரிங் பலகையை’ அகற்றச் சென்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி உறவினர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் தள்ளுமுள்ளு.அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சுப்பிரமணியன் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த செப்டிக் டேங்க் கட்டுமான சென்ட்ரிங் பலகை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தினகரன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த அக்டோபர் 2-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்டு 108 வாகன மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தொழிலாளர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மனித கழிவுகளை மனிதனே அகற்ற தடை என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரூ.30 லட்சம் இழப்பீடு மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் 3 நாட்களாக நீடிக்கும் நிலையில் உரிய தீர்வு கிடைக்காததால், நேற்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.வீடு கட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்டு, தற்போது பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும் செப்டிக் டேங்க் புதியதாக கட்டுமானம் செய்யப்பட்டு வரும்போது, அதனை எதனடிப்படையில் மலக்குழி என்று குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய முடியும்? என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையை அடுத்தவையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நுழைந்து போராளி வருவதால் பரபரப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *