JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மானாமதுரை நகராட்சி சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகைநகராட்சி ஆனையாளர் தகவல்.

சிவகங்கை அக் 8 சிவகங்கை மாவட்டம்மானாமதுரை நகராட்சி எல்லைக்குட்பட்ட 1 முதல் 27 வார்டுகளில் உள்ள சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 2026-2027 இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை அக்டோபர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை (உயர்ந்தபட்சம் ரூ.5,000) பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் சிரமமின்றி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியுடன் இதர வரியினங்களை காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் (ம) குத்தகை இனங்களை (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) அனைத்து தினங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் இயங்கும் கணினி வரிவசூல் மையம் மூலம் நேரடியாக (ம) இணையதள முகவரி : https:tnurbanepay.tn.gov.in மூலமாகவும் வரியினங்களை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.பொதுமக்கள் இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மானாமதுரை நகராட்சி
ஆணையாளர் முத்து செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *