
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று காசநோய் விழிப்புணர்வு குறித்த தேசிய அளவிலான ஜோஷ் துவக்கவிழா நிகழ்ச்சி காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றதுதேசிய காசநோய் விழிப்புணர்வுத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டுஇ பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்இ காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாகஇ ஊரகப்பகுதிகளான இ.புதுப்பட்டி டி.சிந்தலைச்சேரி தாடிச்சேரி கன்னியப்பப்பிள்ளைபட்டி மற்றும் காமராஜபுரம் ஆகிய 5 ஊராட்சிகளில் பேரணி சுவர்விளம்பரங்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல் ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.குறிப்பாகஇ இந்த அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடம் காசநோயின் அறிகுறிகள்இ தடுப்பு முறைகள்இ ஆரம்பக்கட்ட பரிசோதனை மற்றும் முழுமையான சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இந்நோய் தாக்குதல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் பூரணக் குணமடைய வழிகாட்டியாகவும்இ ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை காசநோய் தாக்குதலிருந்து பாதுகாப்பாக இருந்திடும் வகையில் உறுதுணையாகவும் இருந்து தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன் அறிவுரை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து கடந்தாண்டு தேனி மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகள் என தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஊராட்சி செயலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதுடன் இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டு காசநோய் இல்லாத ஊராட்சிகளாக திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக காசநோய் இல்லாத இந்தியா குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் கல்லூரி மாணவஇ மாணவியர்கள் மற்றும் தேசிய மாணவர்படை மாணவர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply