
*தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உரிய அரசு அனுமதி இன்றி செம்மண் லோடுடன் கொண்டு செல்லப்பட்ட கனரக லாரி பறிமுதல்.வருவாய் அலுவலர் அளித்த புகாரின் பேரில் வாகனத்தை பறிமுதல் செய்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு*தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மண் குவாரிகள் அரசு அனுமதி உடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சில இடங்களில் உரிய அனுமதி இன்றி கனரக லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுவதாக உத்தமபாளையம் ஊரக வளர்ச்சி அதிகாரிக்கு தகவல்கள் கொண்டு செல்லப்பட்டது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி அதிகாரி போடிநாயக்கனூர் சுற்றிப் பகுதிகளில் ஆய்வு செய்ததில் மேல சொக்கநாதபுரம் அருகே TN60AR1881 எண் கொண்ட கனரக லாரியில் செம்மண் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.உடனடியாக வாகனத்தை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் உரிய கனிம வள அனுமதியின்றி மண் கொண்டு செல்வது கண்டறியப்பட்டு நிலையில் வாகனத்தை பறிமுதல் செய்து போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.போடிநாயக்கனூர் வருவாய் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் வாகன பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply